கரூர் TVK உயிரிழப்புகள்: எங்கள் அரசு வேலை கனவுக்கு பதில் யார்?

கரூர் TVK உயிரிழப்புகள்: எங்கள் அரசு வேலை கனவுக்கு பதில் யார்?

புத்தகத்தை தலையணையா வச்சு தூங்குற பசங்க. ஒரு exam-க்காக மூணு வருஷம், நாலு வருஷம் தன் இளமையையே தியாகம் பண்ணுற பசங்க. இப்போ சமூக ஊடகங்களில் ஒரே ஒரு கேள்வி எழுப்பறாங்க — "அரசியல் கூட்டத்துக்கு போய் இழந்த உயிருக்கு அரசு வேலை தருதுன்னா, exam எழுதி காத்திருக்குற எங்களுக்கு எப்போ வேலை தருவீங்க?"

எங்க வலி யாருக்கும் கேட்குதா?

TNPSC படிக்குற ஒவ்வொரு பசங்களும் தன் வீட்டு பொருளாதார சூழலை தெரியும். வீட்ல appa "இன்னும் ஆறு மாசம் பொறு, நான் பாத்துக்கிறேன்" னு சொல்லி, தன் சொந்த தேவைகளையே ஒத்திவைக்குறது. Mess food-ஐ வெறும் சாதம் தண்ணியோட சரி பண்ணிக்கிறது. Coaching fee கட்ட முடியாம, second hand books வாங்கி படிக்கிறது. இதெல்லாம் ஒரு "தியாகம்" இல்லையா? இதுக்கு அரசு எப்போ மரியாதை காட்டப் போகுது?

கூட்டத்தில் நின்னா வேலை, படிப்புல நின்னா காத்திருப்பா?

ஒரு அரசியல் கூட்டத்துக்கு போன குடும்பங்களுக்கு compassionate வேலை உடனே கிடைக்குதுன்னா, ஒரு politcal party-ன் நிகழ்ச்சிக்கு போன விஷயத்துக்கு அரசு பொறுப்பேற்குதுன்னா — அந்த கட்சி தன் சொந்த பணத்தில இந்த குடும்பங்களுக்கு உதவலாமே? ஏன் அரசு government வேலை வழங்கணும்? இந்த கேள்வியை பல TNPSC மாணவர்கள் கேட்குறாங்க, ஏன்னா அவங்களுக்கு தெரியும் — ஒரு government வேலை எவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு வருஷம் காத்திருந்து கிடைக்குதுன்னு.

எங்க கேள்வி வெறுப்பு இல்லை, நியாயம்

இங்க யாரையும் குறைச்சு மதிப்பிடுறது நோக்கம் இல்ல. ஒரு உயிரிழப்பு எப்போதுமே வலி நிறைந்தது தான். ஆனால் TNPSC பசங்களின் கேள்வி இதுதான் — அரசு வேலை என்பது ஒரு தகுதி அடிப்படையிலான உரிமையா இருக்கணுமா, இல்ல compassionate exception-களே norm ஆகிடுமா? 

முடிவுரை

TNPSC படிக்குற ஒவ்வொரு மாணவனும் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்குறான் — "எங்க முறை எப்போ வரும்?" அரசு அளிக்கும் ஒவ்வொரு compassionate appointment-க்கும் பின்னால, exam calendar-ஐ சரியா follow ஆகாத, backlog-ல தேங்கிக்கிடக்குற ஆயிரக்கணக்கான vacancy-கள் இருக்குதுன்னு நினைவில் வைக்கணும்.

இறுதியாக ஒரு கேள்வி மட்டும்: ஒரு கட்சி கூட்டத்துக்கு போய் உயிரிழந்தவங்களுக்கு அரசு வேலை தரணும்னா, அதே அரசு exam எழுதி வருஷக்கணக்கா காத்திருக்குற TNPSC பசங்களுக்கு ஏன் அதே அக்கறை காட்டக்கூடாது?


Post a Comment

Previous Post Next Post

Popular Items